சென்னை: தமிழகத்தில் கொரோனாபரவல் உச்சமடைந்து வருகிறது. சென்னை மட்டுமின்றி மாவட்டங்களி லும் தொற்று பரவல் அதிகரித்த வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. ஆனால், தினசரி அரசு தெரிவித்து வரும் அறிவிப்புகள் சந்தேகத்தையே ஏற்படுத்தி வருகிறது. bty
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் இன்று 1,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 87,235 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னையில் இதுவரை 70,651 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,127 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெரிவித்தது. சென்னையில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,456 ஆக உயர்ந்துள்ளது.