சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவலின்  தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது, அரசு தெரிவித்து வரும் தொற்று பட்டியல் மூலம் தெரிய வருகிறது.  தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும், சோதனைகளையும் சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிக்காக . அனைத்து மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. இருந்தாலும் மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. இருந்தாலும் ஆறுதலாக கொரோனா பரவலுக்கு இணையாக குணமடைவோரும் அதிகரித்து வருகின்றனர்.

மிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 4,985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,70,693 ல் இருந்து 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில்  70 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 3,861-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,21,776 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 69.32 % பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 51,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

1.அரியலூர் 14
2.செங்கல்பட்டு 354
3.சென்னை 1298
4.கோயம்புத்தூர் 139
5.கடலூர் 87
6.தர்மபுரி 36
7.திண்டுக்கல் 78
8.ஈரோடு 31
9.கள்ளக்குறிச்சி 89
10.காஞ்சிபுரம் 329
11.கன்னியாகுமரி 90
12.கரூர் 10
13.கிருஷ்ணகிரி 26
14.மதுரை 106
15.நாகப்பட்டினம் 3
16.நாமக்கல் 25
17.நீலகிரி 27
18.பெரம்பலூர் 7
19.புதுக்கோட்டை 71
20.ராமநாதபுரம் 82
21.ராணிப்பேட்டை 98

22.சேலம் 79
23.சிவகங்கை 80
24.தென்காசி 103
25.தஞ்சாவூர் 83
26.தேனி 107
27.திருப்பத்தூர் 2
28.திருவள்ளூர் 454
29.திருவண்ணாமலை 151
30.திருவாரூர் 46
31.தூத்துக்குடி 200
32.திருநெல்வேலி 180
33.திருப்பூர் 38
34.திருச்சி 77
35.வேலூர் 114
36.விழுப்புரம் 87
37.விருதுநகர் 169