டில்லி
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 1270 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது.
உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த பரவல் இந்தியாவிலும் காணப்படுகிறது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமலாக்கி உள்ளது.
இந்தியாவில் இதுவரை 1270 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 450 பேர் மற்றும் டில்லியில் 320 பேர் மூன்றாவது இடத்தில் கேரளா 109 பேர், நான்காம் இடத்தில் குஜராத் 97 பேர், மற்றும் 5 ஆம் இடத்தில் ரஜஸ்தான் 69 பேர் என உள்ளது.
மற்ற மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு விவரம் பின் வருமாறு
தெலுங்கானா 62
தமிழகம் 46
கர்நாடகா 34
ஆந்திர பிரதேசம் 16
மத்தியப் பிரதேசம் 9,
மேற்கு வங்கம் 11
ஹரியானா 14
ஒடிஷா 14
ஜம்மு காஷ்மீர் 3
உத்தரப்பிரதேசம் 2
சண்டிகர் 3
லடாக் 1
உத்தரகாண்ட் 4
ஹிமாச்சல் பிரதேசம் 1
மணிப்பூர் -1,
கோவா -1
பஞ்சாப் -1
அந்தமான் 2
இதுவரை ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து 374 பேர் குணமடைந்துள்ளனர்.