டில்லி : நடப்பாண்டில் 126 புலியள் இறந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்து உள்ளன. நம் நாட்டின் தேசிய விலங்கான புலியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு உயிரிழந்த புலிகளின் விபரங்களை என்.டி.சி.ஏ., எனப்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நேற்று வெளியிட்டது

மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் புலிகள் இறந்ததை அடுத்து. நாடு முழுவதும் இந்த ஆண்டு புலிகள் இறந்துள்ளது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த அறிக்கையில்,  நாட்டில் புலிகள் எண்ணிக்கை அழிவின் விளிம்பில் இருந்து மீட்சிக்கான உறுதியான பாதைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக றியுள்ளது,  நடப்பாண்டில் புலிகளின் வளர்ச்சி  ஆரோக்கியமாக இருப்பதாகவும்,  6 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் கண்டுபிடிப்புகளில் புலிகளின் ஆரோக்கியமான வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை 6 சதவீதமாகக் காட்டியுள்ளன, இது இயற்கை இழப்புகளை ஈடுசெய்கிறது மற்றும் இந்திய சூழலில் புலிகளை வாழ்விடங்களைச் சுமக்கும் திறன் மட்டத்தில் வைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்.டி.சி.ஏ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:நம் நாட்டில் இந்த ஆண்டு 126 புலிகள் உயிரிழந்துள்ளன; இது கடந்த ஆண்டை விட அதிகம்.இந்த ஆண்டு புலிகளின் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. இங்கு இதுவரை 44 புலிகள் உயிரிழந்துள்ளன. மஹாராஷ்டிராவில் 26 புலிகளும், கர்நாடகாவில் 14 புலிகளும் உயிரிழந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.