சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொழில் வரி கட்டாத 125 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே சொத்து வரி, தொழில் வரி, மாநகராட்சி அனுமதி பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தொழில்வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைக்கும்பணி தொடர்ந்து வருகிறது.
சென்னையில், வரி கட்டுவதற்கான கால அவகாசம் முடிந்தும், வரி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் 15 மணடலங்களில் உள்ள கடல்களில் தொழில் வரி, சொத்து வரி காட்டாத மற்றும் உரிமம் பெறாமல் கடை வைத்திருப்பவர்கள் உடனடியாக நிலுவைத்தொகையை கட்ட வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதை மீறி, தொழில் வரி மற்றும் சொத்து வரி கட்டாமல் இயங்கி வந்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சென்று கடையை மூடி சீல் வைத்து வருகின்றனர்.
அதன்படி நேற்று, 125 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். சென்னை திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதி சாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெரு, ராயப்பேட்டை எல்.பி. சாலை பகுதிகளில் சொத்து வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த சமயத்தில், மாநகராட்சி அதிகாரிகளுட்ன் கடையின் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இருப்பினும் காவல்துறையின் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் வரி தொழில் வரி மற்றும் உரிமம் பெறாத இயங்கி வந்த கடாய்களுக்கு சீல் வைத்தனர்.