சென்னை,  சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான் என அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் தெரிவித்தார்/

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்து,  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னை சேலம் 8 வழிச்சாலை குறித்து பேசினார். அப்போது, சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை. ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன நினைப்பாடோ அதே நிலைப்பாடுதான் இப்பபோதும் உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது,8 வழிச்சாலை திட்டத்தில்  மக்களின் கருத்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-கூறியிருந்தார். அதேநிலை தான் தற்போது நீடிக்கிறது. 8 வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்து கேட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலைகளை மேம்படுத்த சாலைப் பணியாளர்கள் தேவைபடுகின்றனர். மாநில அரசின் நிதிநிலை எல்லோருக்கும் தெரிந்ததுதான். உரிய காலம் வரும்போது சாலை பணியாளர்களை தேர்வு செய்ய முதலமைச்சர் அனுமதிப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.