ஐதராபாத்.
ரவி தேஜா என்னும் 12 வயது சிறுவன் பழுதடைந்த சாலைகளை டெப்ரிஸ் கொண்டு சீரமைத்து வருகிறார்.
ஐதராபாத் நகரில் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சமீபத்தில் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியர் குழியில் விழுந்து, அந்தக் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. பலத்த சிகிச்சைக்குப் பின் அந்தக் குழந்தை பிழைத்துக் கொண்டது. இந்த விபத்தை கண்ணால் கண்ட ரவி தேஜா என்னும் 12 வயது சிறுவன் மனம் நொந்து போனார்.
ரவி தேஜாவின் தந்தை சூரியநாராயணா ஒரு கட்டுமானத் தொழிலாளி. அவர் தாய் நாகமணி இல்லத்தரசி. இனியும் இது போல விபத்துக்களை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், ஒரு கை வண்டி மூலம் கட்டிடம் இடித்த கற்கள் (டெப்ரிஸ்) மணல், ஆகியவைகளை எடுத்து வந்து குழிகளை ரவி நிரப்பி வருகிறார். .எந்த சாலையில் குழிகளைக் கண்டாலும் அங்கு வந்து தன் பணியை செய்கிறார். அவர் வரும் நேரத்தில் போக்குவரத்து அதிகமாக இருந்தால், போக்குவரத்து குறையும் வரை காத்திருந்து தனது பணியை செய்கிறார்.
சமூகப் பணி செய்ய வயது தேவை இல்லை, நல்ல மனது போதும் என்பதற்கு ரவி தேஜா ஒரு உதாரணம்