பேரக்குழந்தைகள் புடை சூழ திருமணம் : உ பி யில் அதிசயம்

கிம்பூர் கேரி, உ. பி.

முப்பது வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த ஒரு ஜோடி தனது மகள்கள், மற்றும் பேரக்குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்ட அதிசய திருமணம் உ.பி. யில் நடந்தது.

உத்திரப் பிரதேச லகிம்பேர் கேரி மாவட்டத்தை சேர்ந்தவர் நோக்கேலால் மவுரியா,   இவர் அதே கிராமத்தை சேர்ந்த ரமாதேவி என்பவருடன் கடந்த 1984 வருடம் முதல் திருமணமாகாமல் குடும்பம் நடத்தி வருகிறார்.  இப்போது நோகேலாலுக்கு 76 வயதும், ரமாதேவிக்கு 70 வயதும் ஆகிறது.  இருவருக்கும் இரு மகள்களும், பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

இவர்களின் மகள்கள் இருவருக்கும் தங்கள் பெற்றோர் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை.  எனவே அவர்கள் இருவரையும் திருமணம் செய்துக் கொள்ள பல நாட்களாக வற்புறுத்தி வந்தனர்.  இறுதியாக திருமணத்துக்கு சம்மதமும் பெற்றனர்.

நோக்கேலால் மணமகன் அலங்காரத்துடன், உள்ளூர் துர்க்கை அம்மன் கோயிலுக்கு கிராமத்தினர் கூட்டி வர மணமகளுக்காக காத்திருந்தார்.  ரமாதேவியும் அலங்கரிக்கப்பட்டு, தனது மகள்கள், பேரக்குழந்தைகளுடன் அங்கு வந்தார்.   கோயிலில் அவர்களுக்கு முறைப்படி கோயில் பண்டிட் திருமணம் செய்து வைத்தார்.

ஒரு பழைய திரைப்படத்தில் “கல்யாணம் பாரு, அப்பாவோட கல்யாணம் பாரு” என பாடல் வரும்,  ஆனால் இந்த ஜோடியின் மகள்கள் உண்மையாகவே அப்பா-அம்மா கல்யாணத்தை பார்த்து விட்டார்கள்


English Summary
Marriage conducted for a pair after living together for 33 years