சென்னை

மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.  இது குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது.    இந்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.   இந்த 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடஙக்ப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 6756 பள்ளிகளில் பயிலும் 8,51,792 மாணவ மாணவியரும், 40,682 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.  தமிழ்நாட்டில் 2894 தேர்வு மையங்களும்,   புதுவையில்48 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.   இதில் சென்னையில் 171 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன.

தேர்வு அறையில் மற்றவர்களை அல்லது துண்டுச் சீட்டை பார்த்து எழுதுபவர்கள் 2 ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இவர்களை கண்டு பிடிக்க கடுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.