சென்னை: எடப்பாடிக்கு எதிராகசெயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, அதிமுக முன்னாள் எம்.பி., சத்தியாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட 12 பேரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னதாக, அதிமுகதலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்டமுடிவின்படி, செங்கோட்டையன் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில்தான் செங்கோட்டையனின் நெருங்கிய ஆதரவாளர்களான 12 முதல் 14 பேரை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள்:
முன்னாள் எம்.பி. சத்தியபாமா
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன்
நம்பியூர் அதிமுக ஒன்றியச்செயலாளர் சுப்பிரமணியம்
கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன்
முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி
அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ்
உள்ளிட்ட 14 பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.