திருச்சி:  அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பயிற்சிக்குச் செல்லும்போது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்ததும், மீண்டும் விசாரணை சூடுபிடித்துள்ளது.  திமுக பதவி ஏற்றதும், சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்ற னர். அதன் ஒருபகுதியாக, அந்த பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ரவுடிகள் பிடித்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக காவல்துறை ஏற்கனவே தெரிவித்தது. அதன்படி, கடந்த விசாரணையின்போது, சத்யராஜ், லட்சுமி நாராயணன், சாமி,  ரவி, ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள்  8 பேரும் நிதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, மற்ற 4 பேரையும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  மற்ற 4 நான்கு பேரையும் காவல்துறையினர்  திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி  சிவக்குமார் முன்னிலையில்  ஆஜர்படுத்தினர். அதன்படி,  மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர், நீதிபதி முன் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 12 பேருக்கும் விரைவில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கில் 8 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை! நீதிமன்றத்தில் தகவல்..