சென்னை: பீகாரில் அழைத்து வரப்பட்டு, சென்னை மாதவரம் அருகே உள்ள பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள இஸ்லாமிய மதரஸாவில் 2 மாதங்களாக 12 சிறுவர்கள் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நிறுவனர்கள் மீட்கப்பட்டு, சொந்த மாநிலமான பீகாருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதரஸா பள்ளிகளில் சிறுவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. ஆனால், அதை மரஸாக்கள் மறுத்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பகுதியில் உள்ள பொன்னியம்மன்மேடு பகுதியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 10 வயது முதல் 12 வயதுள்ள சிறுவர்கள் 12 பேர் தங்கி, பயின்று வந்ததும், அவர்கள் மதரஸா நிர்வாகிகளிடம் கொடுமைப்படுத்தப்பட்டது தெரிய வ்நதது. இதையடுத்து, கடந்த நவம்பர்க29ம் தேதி, குழந்தைகள் நல அமைப்பு, கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் ராஜாராம் முலம் அங்கு விசாரணை நடத்தினார். அப்போது, அங்கிருந்த சிறுவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சிறுவர்களின் முகம், கை, கால், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கப்பட்ட தழும்புகள் இருந்தன. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அரசு சிறுவர்கள் மருத்துவமனைக்கு 12 பேரையும் அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மதரசாில் கல்வி பெற சிறுவர்களை பீகாரில் இருந்து அழைத்து வந்ததும், இதற்காக, அவர்கள் பெற்றோர்களிடம் மாதம்தோறும் பணம் பெற்றதும், சரிவர படிக்காத சிறுவர்களை கம்பாலும், வயராலும் அடித்து சித்திரவதை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளி உரிமையாளர் அக்தர், ஆசிரியர் அப்துல்லா ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இணை கமிஷனர் ராஜேஸ்வரி கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை நேற்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பீகார் செல்லும் ரயிலில் வழி அனுப்பி வைத்தனர். சிறுவர்களுடன் 4 போலீசார் பீகார் செல்கின்றனர். பீகார் மாநில குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் மூலம் பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளனர். இந்த சிறுவர்களுக்கு போலீசார் சார்பில் பரிசு பொருட்கள் மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.