டில்லி

த்திய அமைச்சர் உள்ளிட்ட 12 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

அண்மையில் சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று இதில், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் நீங்கலாக மீதமுள்ள மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

மீதமுள்ள சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட சில பாஜக எம்.பிக்கள், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டனர். இவர்களில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் வெற்றி பெற்றிருந்த நிலையில் அவர்களில் 10 பேர் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இவ்ர்களில் மத்திய மந்திரிகளான நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல் ஆகியோரும் அடங்குவர். இவ்வாறு ராஜினாமா செய்யாத பாபா பாலாகாந்த் மற்றும் ரேனுகா சிங் ஆகியோரும் விரைவில் ராஜினாமா செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முதல்வர் ஆகும் கனவில் இருப்பதால் மூன்று மாநிலங்களிலும் முதல்வராக பாஜக யாரைத் தேர்வு செய்ய இருக்கிறது என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.