12/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

Must read

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது.

இன்று ஒரேநாளில், புதிதாக மேலும் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள தால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 76 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 8,307 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,649 -ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,483 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 922 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 884 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 8,96,778 -ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் மட்டும் 88,562 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 58,03,778 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article