சென்னை: தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 15,759 பேர் பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் 1,094 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையின் பாதிப்பு குறித்து மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில்  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,24,597 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 1,094 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அதேவேளையில்,  தமிழகத்தில் இதுவரை  கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,906 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 21,20,889 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில், கொரோனா வார்டில் 1,74,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில்12 ஜூன், 2021, காலை 8.00 மணி  நிலவரப்படி  இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை: 24,96,00,304

கடந்த 24 மணி நேரத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை: 34,33,763

தலைநகர் சென்னையில் நேற்று  1,094 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,23,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் நேற்று நிகழ்ந்த 378 கொரோனா உயிரிழப்புகளில்,  59 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில். இதுவரை 7,720 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,377 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,04,561 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 10,842 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு:

 

[youtube-feed feed=1]