டில்லி:
ராணுவம், உள்துறை, சட்டம் உள்பட 25 மத்திய அரசு இணையதளங்கள் இன்று முடங்கியது. இதில் சீன மொழி வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதனால் இணையதளங்களை மர்ம ஆசாமிகள் முடக்கியதான கூறப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு என்று கூறப்பட்டது.
எனினும் முடங்கிய இணைய தளங்களை மீண்டும் செயல்பட வைக்கும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரை 114 அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை இந்தியாவின் 22,207 இணைய தளங்கள் முக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிகியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் 114 அரசு இணைய தளங்களுக்கும் முடக்கப்பட்டது என்று லோக்சபாவில் ஒரு கேள்விக்கு மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் அப்போன்ஸ் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த காலக்கட்டத்தில் இணைய தள முடக்கம் மற்றும் வைரஸ் தாக்குதல் குறித்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அளித்துள்ளது. அரசின் அனைத்து புதிய இணைய தளங்கள் மற்றும் செயலிகளும் சுழற்சி முறையில் சைபர் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.