சென்னை,

1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமண ஆணை விரைவில் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

மத்திய அரசு 2010ம் ஆண்டு நிறைவேற்றிய  சட்டப்படி ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, ஆசிரியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.கடைசியாக 2014ம் ஆண்டுக்கு பிறகு டெட் தேர்வு நடைபெற்றது.

அப்போதைய தேர்வில் வெற்றி பெற்ற 1111 பேருக்கு  இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்பட வில்லை.

இந்நிலையில் தற்போது ஆசிரிர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு  விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஏற்கனவே தேர்வு பெற்றவர்கள், தங்களுக்கு பணி கிடைக்குமா? என்று சந்தேகத்தோடு இருந்து வருகிறார்கள்.

அவர்களுக்கு பணி நியமண ஆணை வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதற்கான பட்டியல் வரும் 10ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர்  தகுதித் தேர்வு வாரியத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவு பணியிடங்கள் 623, அனைவருக்கும் கல்விதி திட்டத்தின் கீழ் 202 பணியிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கனவே,  2012,13 மற்றும் 14ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1111 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.எட் படித்த வருடத்திலேயே தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், ஏற்கெனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு வராதவர்கள் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது பணித் தெரிவுக்குரிய தகுதியினைப் பெறாமல் தற்போது தகுதியைப் பெற்றிருப்பவர்கள் ஆகியோர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்து உள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தகுதி பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மார்ச் 10ந்தேதி வெளியிடப்படும் என்றும்,  அந்தப் பட்டியல் ஆன்லைனில் 20ந் தேதி வரை இருக்கும் அதனையும் சரிப்பார்த்துக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.