ஜிவிஷான் கவுண்டி
சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சீனாவில் 111 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவிக்கின்றது.
நில் நடுக்கத்தில் இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
அமெரிக்க புவியியல் அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், கன்சு மாகாணத்தில் உள்ள லிங்சியா செங்குவான்ஜென் பகுதியில் இருந்து 37 கி.மீ. தொலைவில் மற்றும் லான்ஜவ் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்து உள்ளது. இங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.