டில்லி
சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவதை எதிர்த்து சுமார் 1100 மாணவர்கள் உச்சநீதிம்ன்றத்தில் வழக்கு தொடற்துள்ளனர்.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவல் குறைந்துள்ள போதிலும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இதையொட்டி பிரதமர் மோடியின் அறிவுறையின் பேரில் 12 ஆம் வகுப்பு சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆயினும் தனித் தேர்வர் மாணவர்களுக்க் மதிப்பெண் வழங்க தேர்வுகள் நடத்த முடிவு எடுக்கபட்டன.
இதற்கு தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.. சி பி எஸ் இ அளித்த இந்த ஏற்பாட்டுக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த ஒப்புதலை எதிர்த்து சி பி எஸ் இ மீது சுமார் 1100 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் ”சி பி எஸ் இ 12 ஆம் வகுப்புத் தேர்வை அர்சு கொரோனாவால் ரத்து செய்துள்ளது. ஆனால் தனித் தேர்வு மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கான தகுதித் தேர்வு நடத்த உள்ளது. இதன் மூலம் அவர்களின் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.
இது அனைவரும் நலமாக வாழும் உரிமைக்கு எதிரானதாகும். எனவே ஏற்கனவே வகுப்புத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். ” என கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.