லண்டன்
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் கத்தியால் கொல்ல முயற்சிக்கப்பட்ட போது அதில் ஒரு 11 வயது சிறுமி அபாய கட்டத்தில் உள்ளார்.
தெற்கு லண்டன் நகரில் உள்ள என்ஃபீல்ட் பகுதியில் லிவிங்ஸ்டன் சாலை அமைந்து உள்ளது. இந்த பகுதியில் 30 வயதை தாண்டிய ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். திடீரென அவர் வீட்டில் இருந்து கூச்சல் எழுந்ததை ஒட்டி காவல்துறையினருக்கு அருகில் இருந்தோர் தகவல் அளித்தனர்.
அப்போது அந்த நால்வரும் கத்தி குத்து காயங்களுடன் இருந்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு 11 வயது சிறுமி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்/ மற்ற மூவரும் அபாய கட்டத்தை தாண்டி உள்ளனர்.
அவர்களுக்கு நெருக்கமான யாரோ இந்த தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும் என காவல்துறையினர் சந்தேகத்தில் உள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்ப்ட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. காவல்துறையிடம் தகவல் அளித்தவருக்கு எவ்வித விவரமும் தெரியவில்லை. இது ஒரு மர்ம வழக்காக உள்ளது.