ண்டன்.

லகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கையை இந்தியா 7 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

உலகக் கோப்பை போட்டியின் இன்றைய லீக் ஆட்டங்களில் ஒன்றில் இந்தியாவும் இலங்கையும் மோதின. ஹெடிங்லி கார்னெஜி அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா பந்து வீச தொடங்கியது. இன்று இலங்கை வீரர்கள் அபாரமாக ஆடினர்.

இலங்கையின் அஞ்செலா மாத்யூ இன்று சதம் அடித்தார். அவர் 113 ரன்களும், லாகிரு 53 ரன்களும் தனஞ்சயா டி சில்வா 29 ரன்களும் எடுத்தனர். இலங்கை 50 ஓவர்களில் 7 விகட்டுகள் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு 265 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியின் கே எல் ராகுல் 111 ரன்களும், ரோகித் சர்மா 103 ரன்களும் எடுத்தார். இதில் ரோகித் சர்மா உலகக் கோப்பை போட்டிகளில் தனது 5 ஆவது சதம் அடித்து சாதனை புரிந்தார். இதற்கு முன்பு இலங்கை வீரர் சங்கஹாரா 4 சதம் அடித்த சாதனையை தற்போது ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

அணித் தலைவர் விராட் கோலி 34 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியா 43.3 ஓவர்களில் வெற்றி இலக்கான  265 ரன்களை எட்டியது. இந்தியா 3 விக்கட்டுகள் மட்டுமே இழந்திருந்ததால் . 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இந்த போட்டியின் தரவரிசையில் ஏற்கனவே முதலிடம் பிடித்திருந்த ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது..