சென்னை: தமிழ்நாட்டில் அவ்வப்போது உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையிலில், இன்று  11 ஐ.பி.எஸ் அதிகாரிகள்   இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   அதுபோல , 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளத. அதன்படி,  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு ஏடிஜிபி கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்பு பணியில் இருந்து வரும் ஏடிஜிபி மகேஷ்வர் தயாள், சிறைத்துறை ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, தமிழ்நாடு செய்திதாள் காகிதங்கள் ஆலை நிறுவன டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு செய்திதாள் காகிதங்கள் ஆலை நிறுவன ஐஜி பிரமோத் குமார், டான்ஜெட்கோ ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜி ஆர்.தமிழ்சந்திரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்பு பணியில் இருந்து வரும் டிஐஜி ஜி.தர்மராஜன், சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலோர காவல்படை எஸ்பி எம். சந்திரசேகரன், கோவை மண்டல குடிமைப் பொருட்கள் வழங்கல் துறையின் சிஐடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மண்டல குடிமைப் பொருட்கள் வழங்கல் துறையின் எஸ்பியாக இருந்த பி.பாலாஜி, மதுரை தெற்கு சரக துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை தெற்கு சரக இணை ஆணையரான ஏ.பிரதீப், திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட எஸ்பியான வி.பாஸ்கரன், சென்னை கிழக்கு போக்குவரத்து துறை துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து துறை துணை ஆணையர் சமய் சிங் மீனா கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்து, உத்தரவிட்டுள்ளார்.