சென்னை: தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்க, ஒவ்வொருவரும் வெளியே வரும்போது மாஸ்க் (முக்கவசம்) அணிய வேண்டும என உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில், விதியை மீறி மாஸ்க் அணியாத 11.45 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 48 நாளில் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றியதாக 11.45 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் 8-ந் தேதி முதல் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கு போடப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மே 26ந்தேதி மாலை நிலவரப்படி, கடந்த 48 நாட்களில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 88 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
மே 25ந்தேதி 10 ஆயிரத்து 942 பேர் மீதும் வ மே 26ந்தேதி ஒரே நாளில் 11 ஆயிரத்து 260 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதுபோல, சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றத்துக்காக இதுவரை 53 ஆயிரத்து 780 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக இதுவரை 13 ஆயிரத்து 91 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.