சென்னை: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,  திமுக கூட்டணி 122 இடங்களிலும், அதிமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மொத்தம் 220 தொகுதிகளின் முன்னிலை விவரம் வெளியாகி உள்ளது.

ஊடங்களில் வெவ்வேறு எண்ணிக்கையில் நிலவரங்கள் வெளியாகும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான தகவல் இங்கே தரப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திமுக 110 தொகுதிகளிலும்

காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளிலும்

விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

மார்க்சிஸ்டு 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

அதிமுக  79 தொகுதிகளிலும்

பாஜக 4 தொகுதிகளிலும்

பாமக 9 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.,