டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முதன்முறையாக 2000க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 1957 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,957 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் 2,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 2,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. தினசரி பாதிப்பு விகிதம் 0.71 சதவிகிதமாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,822 ஆக அதிகரித்து உள்ளது.
தற்போது, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27,374 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,654பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,60,198 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,19,04,76,220 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 5,03,576 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.