சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தலைநகர் சென்னையில் மட்டும் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில், தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,30,592 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 186 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,119 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,119 -ஐ எட்டியுள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,304 ஆக உள்ளது.
சென்னையில் நேற்று 174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,45,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,421 பேர் மரணம் அடைந்துள்ளனர். 208 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,35,663 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,798 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
09.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 43,71,309 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 09.09.2021 அன்று 19,637 ஷாட்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு:






