ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.46 கோடியை தாண்டி உள்ளது. குணமடைந்தோர் 20 கோடியை தாண்டிய நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகானில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா எனும் பெருந்தொற்று உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த தொற்று பரவத்தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கும் நேரத்திலும் உருமாறிய நிலையில், மீண்டும் மீண்டும் பரவி  உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தற்போதைய நிலையில், தொற்றில் இருந்து உயிரை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றாலும், உருமாறிக்கொண்டு பரவி வரும் வைரசை முழுமையாக ஒடுக்குவதில் தடுப்பூசியின் செயல்பாடும் போற்றுதலுக்கு உரியதாக இல்லை. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது/

இதனால் மக்களை தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் முகக்கவசம் அணிவதை தவிர்க்காமல், அனைவரும் முக்ககவசம் அணிந்து கொரோனா தடுப்பூ நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதுஒன்றே இதற்கு தீர்வுவாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 224,645,461 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வேளையில் சிகிச்சை காரணமாக குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கையும் 201,184,310 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 4,630,771 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 18,830,380  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18,726,781 (99.4%) பேர் லேசான பாதிப்பிலும், 103,599 (0.6%) தீவிரமான பாதிப்பு காரணமாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.