சென்னை:
மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்எஸ்எல்சி (10ம் வகுப்பு) பொதுத் தேர்வு ஜூன் 1ந்தேதி தொடங்குவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஹாட் டிக்கெட் மற்றும் தேர்வு தொடர்பான விவரங்கள் 18ந்தேதி ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் என  கூறியிருந்தார்.
இந்த நிலையில்,  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் எழுத பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுத்தேர்வின் போது கொரோனா  பரவாமல் தடுக்க சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில், ஒரு அறையில்  10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.