குடியாத்தம்

த்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையின் குடிப்பழகத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பத்தை சேர்ந்தவர் பிரபு என்பவர் கூலித்தொழிலாளி ஆவார் . இவருக்குக் கற்பகம் என்னும் மனைவியும் விஷ்ணு பிரியா என்னும், 10ம் வகுப்பு படித்து வரும் மகளும் உள்ளனர்.

தொழிலாளி பிரபுவுக்குக் குடி பழக்கம் இருந்துள்ளது. இதையொட்டி அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விஷ்ணுபிரியாவுக்கு இது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தாம் எழுதியிருந்த கடிதத்தில், ‘எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவும். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டால் என் ஆன்மா சாந்தி அடையும்’ என எழுதி இருந்தார்.