சென்னை:
இன்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6100 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்ச்சி பெற்றுள்ளது.
இதில், அரசு பள்ளிகள் 92.48 சதவிகிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.53 சதவிகிதமும், மெட்ரிக் பள்ளிகள் 99.05 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
அதுபோல தேர்வு எழுதிய கைதிகளில் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
பாட வாரியாக தேர்ச்சி விவரம்
தமிழ் – 96.12%
ஆங்கிலம் – 97.35%
கணிதம் – 96.46%
அறிவியல் – 98.56%
சமூக அறிவியல் – 97.07%
10-ம் வகுப்பு தேர்வெழுதிய சிறைக் கைதிகள் 152 பேரில், 110 பேர் தேர்ச்சியடைந்தனர்..