சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு,  1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர்  இந்த தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணாக்கர்கள் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.  அதாவது, மொத்தம் 91.55%  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதே வேளையில், தமிழ்நாட்டில் 87.69% சிறைவாசிகளும்,   மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பூந்தமல்லி பார்வை குறைபாடுடை யோர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% சதவிகிதம் தேர்ச்சி; 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 15 மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்ச்சியில், அதிகபட்சமாக  97.31% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.  சிவகங்கையில் 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2ம் இடத்தையும்,   96.36% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3-ம் இடத்தை ராமநாதபுரம் மாவட்டம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைந்தது. 4107 மையங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இந்தநிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி  காலை வெளியானது. . ரிசல்ட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம் தெரிந்துக் கொள்ள முடியும். இணையதளங்களில் மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழைந்த மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே10) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.  இதில் மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர்  இந்த தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.  இவர்களில் மாணவிகள் 94.53 % பேர் தேர்ச்சி பெற்றுள்னர்.  மாணவர்கள் 88.50 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மொத்தம் 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்கள் – 8,18,743 (91.55%) மாணவியர் – 4,22,591 (94.53 %) தேர்ச்சி மாணவர்கள் – 3,96,152 (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் மொத்தம் 4,105 பள்ளிகள் இந்த தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.எ , அதிகபட்சமாக  97.31% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.  சிவகங்கையில் 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2-ம் இடத்தையும், எ  96.36% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3-ம் இடத்தை ராமநாதபுரம் மாவட்டம் பிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவிகிதம் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும் பி.  திருச்சி மாவட்டம் 95.23 சதவிகித தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டிலும் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்திருந்த சிவகங்கை மாவட்டம், இந்தாண்டும் 2 ஆம் இடம் பிடித்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளது.

பாட தேர்ச்சி சதவிகிதங்களில், தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் – 96.85% , ஆங்கிலம் – 99.15% ,  கணிதம் – 96.78% ,  அறிவியல் – 96.72% 5. சமூக அறிவியல் – 95.74 தேர்ச்சி பெற்றுள்ளனர். 100க்கு 100 மார்க் எடுத்தவர்களில்,  தமிழ் பாடத்தில் – 8 பேரும், ஆங்கிலம்  பாடத்தில் – 415 பேரும்,  கணிதம்  பாடத்தில்,  20,691 பேரும்,  அறிவியல்  பாடத்தில் 5,104 பேரும்,  சமூக அறிவியல்  பாடத்தில்  4,428 பேரும்  100க்கு 100 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில்  260 சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய நிலையில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது  87.69% தேர்ச்சியாகும். அதுபோல  தேர்வு எழுதிய  மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி .10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 13,510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12,491 தேர்ச்சி பெற்றுள்ளனர்.