ஈரோடு:
மிழகத்தில் ஜூன் 1ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 18ம் தேதி ஆலோசனைக்குப் பிறகு 10ம் வகுப்பு ‘ஹால் டிக்கெட்’  தொட்ர்பாக அறிவிக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  பள்ளி மாணவ மாணவிகளுக்கு யூடியூப், கல்விச்சேனல், மத்திய அரசின் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மாணவர்கள் தினசரி ஒருமணி நேரம் பாடம் கற்க முடியும். மாணவர் நலன் கருதி, பெற்றோர் நிலை கருதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே தேர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறியவர்,  குஜராத், கேரள மாநிலங்களில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் முடிவுற்று விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் நிலையில் உள்ளது.
எனவே தமிழகத்திலும் ஜூன் 1ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று கூறியவர்,  பொதுத்தேர்வை மாணவர்கள் எழுதுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஹால் டிக்கெட் வழங்கப்படுவது  குறித்து மே19-ம் தேதி தெளிவான விளக்கம் அளிக்கப்படும்.
மாணவர்கள் பத்திரமாக தேர்வு எழுதி, வீடு திரும்பும் வரையிலான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

[youtube-feed feed=1]