சென்னை: தமிழ்நாட்டில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 4ம் தேதி (அக்டோபர்) மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் மார்சில் நடத்தப்பட வேண்டிய தேர்வு ரத்து செய்யப்பட்டு, 10ம் வகுப்பு மாணாக்கர்கள் ஆண்டு இறுதித்தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களின் மதிப்பெண் பட்டியலும் உயர்வகுப்புகளில் சேரும் வகையில் இணையதளத்தில் வெளியானது.
இநத் நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 04.10.2021 (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.