சென்னை: மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் என்பது 10ஆம் வகுப்பில் 88.76%ஆகவும் , 12ஆம் வகுப்பில் 93.99% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 886 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதுபோல, 5,424 மாற்றுத் திறனாளி மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதைத்தொர்ந்து, 10ம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி தொடங்கும் என அறிவிபையும் வெளியிட்டனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9,12,620 பேர் எழுதி உள்ளனர் . அதில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்களும் 3ம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக 10ம் வகுப்பில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதமானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 886 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.8% பேரும் மாணவிகள் 94.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.2019 பொதுத் தேர்வில் 95.2% தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு 90.07% ஆக தேர்ச்சி குறைந்துள்ளது.
10ம் வகுப்பில் 97.22% தேர்ச்சியுடன் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.79.87% தேர்ச்சி மட்டுமே பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்புத் தேர்வை எழுதியவர்களில் 85.25% தேர்ச்சி பெற்றுள்ளனர். 886 அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் 100% 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவில்லை. மொத்தம் 4,006 பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலத்தில் 45 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் 2186 பேர் 100க்கு 100க்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 3841 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொது தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
6,016 மாற்றுத் திறனாளிகளின் 5,424 மாற்றுத் திறனாளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 242 சிறைவாசி மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 133 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.