சென்னை: கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய, தமிழகஅமைச்சர் செந்தில் பாலாஜி,மற்றும அதிகாரிகள் குழுவினருடன்  ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காட்லாந்து புறப்பட்டு சென்றனர்.

தமிழகத்தில், கடல் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க சாதகமான சூழல் நிலவுவதாக அறியப்பட்டுள்ளது. அதுபோல குஜராத் மாநிலத் திலும் கடலில் காற்றாலை மின்நிலையம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும், 30ஆயிரம் மெகாவாட் திறனில், கடல் காற்றாலை மின் நிலையங்களை, 2030ம் ஆண்டிற்குள் அமைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கடல் காற்றாலை தொடர்பான   பரிசோதனை மேற்கொள்வதற்கு, தேசிய காற்று சக்தி நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடலில், 16 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க உள்ளது. இதனுடன் இணைந்து  தமிழக மின்வாரியமும் கடல் காற்றாலை மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பான தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்வதற்காக, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தி துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் பகிர்மான இயக்குனர் சிவலிங்கராஜன், மின் வாரிய மரபுசாரா மின்சார பிரிவு தலைமை பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர்,5 நாள் பயணமாக ஞாயிறன்று ஸ்காட்லாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த குழுழுவினர், அந்நாட்டின் கிளாஸ்கோ நகருக்கு சென்று, கடலில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையங்களை பார்வையிட உள்ளதுடன், அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து ரும், 25ம்தேதி தமிழகம் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.