சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை  ஒரே நேரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். ஏற்கனவே காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவும், மதியம் 10ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்த நிலையில், அறிவிப்புக்கு மாறாக இரண்டையும் ஒருநேர அமைச்சர் வெளியிட்டார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில், 246 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள்பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12ம் வகுப்பு மொழித் தேர்வில் 47 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றன. இந்த நிலையில் இந்த வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிடப்படும் என அறிவித்தது. அதன்படி, காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் 93.76 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,06,277 மாணவ, மாணவிகளில் 7,55,998 பேர் தேர்ச்சி பெற்று ள்ளனர்.

12ம் வகுப்பு தேர்வில், 93.76% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், 10ம் வகுப்பு  தேர்வில்  94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள தாகவும்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்தெரிவித்ததுள்ளார். கடந்தாண்டை விட இந்தான்டு தேர்விகிதம் அதிகம் என்றும், மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.   97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடமும்,  97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம் பெற்றுள்ளதாகவும்,  12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில்வணிகவியல் பாடத்தில் 4,634 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,540 மாணவர்கள் 100/100 மதிபெண்கள் கணினி அறிவியல் பாடத்தில் 3,827 மாணவர்கள் 100/100 மதிபெண்கள் +2 தேர்வு முடிவுகள் – தனியார் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

12ம் வகுப்பு மாணாக்கர்கள், ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண்  சான்றிதழ்களை பெறலாம் என்று கூறிய அமைச்சர்,  பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு  நடத்தப்படும் என்றும், தேர்ச்சி பெறாத 12ம் வகுப்பு  மாணாக்கர்களுக்கு   ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 12ம் வகுப்பு தேர்வில்  96.13% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  12ஆம் வகுப்பில் 96.13% மாணவ மாணவிகள் தேர்ச்சி அரசு பள்ளியில் பயின்ற 91.96% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு கிடைத்த வெற்றியை விட 4.8% தேர்ச்சி விகிதம் அதிகம்  என்றும் கூறியுள்ளார்.

மிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை  வெளியிட்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , தமிழகம், புதுச்சேரியில் 90.07 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.8 சதவீதம் பேரும், மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி  பெற்றுள்ளதாக கூறிய அமைச்சர் 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள்  நடைபெறும் என்றும் கூறினார். 10ம் வகுப்பில் மொத்தம் 9,12,620 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8,21,994மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம்  பிடித்துள்ளது. 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம். 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பில் 79.87% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

பிளஸ் 2  மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவாரங்களை அறிந்துகொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும். பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.