கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக்ததில் கல்விநிறுவனங்கள் திறப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படாத நிலையில், கொரோனா பரவல் குறைந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன், தற்போது கல்வி டிவி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியவர், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தவர், கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி கொடுக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், 10 ,12ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்ற மாணாக்கர்கள், ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.