சென்னை: தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வரான காலமானா எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், மேயர் பிரியா உள்படப லர் மரியாதை செய்தனர்.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும், சிலைக்கு கீழே எம்ஜிஆரின் புகைப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த படத்துக்கு, அரசு சார்பில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், சிறு குறு தொழில்நுட்பத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் தமிழக அரசு சார்பில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.