சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள நில அளவர், வரைவாளர் உள்பட 1089 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, குரூப் 1, குரூப் 2 , 2A, குரூப் 4 , விஏஓ என குரூப் 8 என பல்வேறு பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது, நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்பட 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
பதவியின் பெயர் : நில அளவர், வரைவாளர் , அளவர்/ உதவி வரைவாளர்.
மொத்த காலியிடங்கள்: 1089
நில அளவர் – 794 +4
வரைவாளர் – 236
அளவர்/ உதவி வரைவாளர். – 55
சம்பளம் – மாதம் ரூ.19500-71900/
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் – 29.07.2022
விண்ணப்பிக்க கடைசி நாள் – 24.08.2022
தேர்வு நடைபெறும் நாள் – 06.11.2022
தேர்வு முறை – கணினி வழித் தேர்வு ( Online Exam)
கல்வித் தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் (அல்லது) சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:
நில அளவர்/வரைவாளர் – 01.07.2022 அன்று 32 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும் .
அளவர்/ உதவி வரைவாளர் – 01.07.2022 அன்று 37 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், சீர்மரபினர், ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை .
தேர்வுக் கட்டணம்: ரூ. 100 ; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150
மேலும், ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மாற்றுத்திறனாளிகளுக்கான4% இட ஒதுக்கீடு உள்பட பிற இடஒதுக்கீட்டு விதிகளும் பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைனில் http://www.tnpsc.gov.in / http://www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.