சென்னை: தமிழகத்தில் மொத்தம் 10,727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்து ஏப்ரல் 6ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இன்று இரவு 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லதாவர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சட்டசபை தேர்தலுக்கான கடைசி பிரச்சார நாளான இன்று பிரச்சாரத்திற்கு கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படுகிறது. எனவே இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யலாம்.
தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை பொருத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படும்.
இரவு 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லதாவர்கள் வெளியேற வேண்டும். தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது. தமிழகத்தில் மொத்தம் 10,727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. 551 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று அவர் தெரிவித்துள்ளார்.