ராஜராஜ சோழன் 1,039 வது சதய விழா தஞ்சையில் இன்று கோலாகலமாக தொடங்கியது
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி மாத சதய நட்சத்திரம் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் 1,039 வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது.
2 நாட்கள் நடக்கும் சதய விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சதய விழாவை ஒட்டி இன்று மாலை 1,039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.