சீக்ரெட் ஆப் சக்சஸ் என்ற பெயரில் மலேசியாவின் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி ஏ. ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது.

டி.எம்.ஓய். கிரியேஷன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான 10000 டிக்கெட்டுகளும் 11 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை கடந்த வாரம் 10000 அடி உயரத்தில் வானில் பறந்தபடி பாராச்சூட்டில் இருந்து குதித்து விளம்பரம் செய்தனர்.

இந்த நிலையில் இசை நிகழ்சசிக்கான டிக்கெட்டுகள் இ்ன்று விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

7 ஆண்டுகள் கழித்து ஏ.ஆர். ரஹ்மான் மலேசியாவில் இசைநிகழ்ச்சி நடத்துவதை அடுத்து ஆவலோடு காத்திருந்த அவரது ரசிகர்கள் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

[youtube-feed feed=1]