சென்னை: 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என இன்று மதுரையில் நடைபெற்ற, மதுரை மண்டல தொழில்துறை மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” எனும் தலைப்பில் தெற்கு மண்டல அளவிலான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு துறை செயலாளர்கள், ஆட்சியர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பங்கேற்றனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மதுரை மண்டல மாநாட்டில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், பள்ளிக் கல்வித்துறையும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தும்.
தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மதுரை மண்டல மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்க ள் குறித்த தகவல்கள் ஒரே இடத்தில் இடம்பெறும் வகையில் 97 திட்டங்கள் குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டு, அதற்கான கையேட்டினை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மதுரை மண்டல மாநாட்டில், நான்காம் தலைமுறை தொழில் நுட்பத்திற்கு (Industry 4.0) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயார்படுத்திக் கொள்ள பயிற்சி வழங்குவதற்காக இண்டோ அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் FaMe TN நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது
நிகழ்ச்சியில் மதுரையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மதுரை மண்டல மாநாட்டில், மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளை 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மதுரை மண்டல மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிக்கான முதல் இடத்திற்கான தமிழ்நாடு அரசின் விருதினை இந்தியன் வங்கிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை துவக்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கும், அந்நிறுவனங் களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கும் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். மேலும், தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறுவதை பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் வங்கிகளில் இருந்தே ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதியை துவக்கி வைத்தார்.
பின்னர் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் வளர வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில்களை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மதுரையில் இயங்கி வரும் 50 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூலம் 3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற 42 பொருள்களில் 18பொருள்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவை. நாட்டில் எளிமையான தொழில் புரிவோர் பட்டியலில் தமிழ்நாடு 14 ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்தை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என அறிவித்ததுடன், மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து 5 ஏக்கரில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என கூறிய முதல்வர் ஸ்டாலின், மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றும், இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். ‘டைடல் பார்க்’ மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் தொழிநுட்பத்தின் முக்கிய மையமாக மதுரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.