சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 1,000கன அடியாக உயர்த்தப்பட்டுள்ள  நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் முக்கியமானது செம்பரம்பாக்கம் ஏரி. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து  வருகிறது. இதனால் அணையின் மொத்ததுமுள்ள 24 அடியில் 22 அடிநீர் நிரம்பி உள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம்  ஏரியில் 3028 மி.கன அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதம் ஆகும். ஏரிக்கு  தற்போது வினாடிக்கு 2,134 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்த ஏரியில்  234 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஏற்கனவெ 500 கடி அடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்ட வந்த நிலையில், இன்று அது 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அரசின் முகாம்களுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.