ஆப்கன் : தலிபான் தாக்குதலில் மரணம் அடைந்தோர் 100 ஆக உயர்வு

Must read

காபூல்

காபூலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 100 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தீவிரவாதிகள் ஆம்புலன்ஸ் ஒன்றை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.   சோதனைச் சாவடி அருகே வந்த போது இந்த ஆம்புலன்ஸ் வெடித்துள்ளது.   உள்துறை அமைச்சகத்தை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.   வணிக வளாகங்கள்,  அரசு அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியவை நிறைந்துள்ள இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.   இதுவரை 100 பேர் இந்த தாக்குதலில் மரணம் அடைந்துள்ளதாகவும்,  158 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

More articles

Latest article