சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், 100நாள் வேலைதிட்ட பணியாளர்கள் வெற்றிலை பாக்கு, குட்கா பொருட்கள் மெல்ல தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிவோர், தனிமனித இடைவெளியை பின்பற்றி பணி செய்ய வேண்டும்,
இதை அவர்களை கண்காணிக்கும் நபர்கள் உறுதிப்படுத்த வேண்டும்,
பணியில் உள்ளவர்கள், வெற்றிலை பாக்கு, குட்கா பொருட்கள் மெல்லக்கூடாது,
55 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கூடாது,
இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்
என தெரிவித்துள்ளது.