வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது.

கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.

சென்னையில் இந்த மாதம் மட்டும் 100 செ.மீ, மழை பெய்துள்ளது.

ஆண்டின் எந்த ஒரு மாதத்திலும் 100 செ.மீ. க்கு மேல் மழை பொழிவது இது நான்காவது முறை.

நவம்பர் மாதத்தில் 100 செ. மீ. க்கும் அதிகமாக மழை பெய்வது கடந்த 200 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]