லண்டன் :

டுத்த ஆண்டு முதன்முறையாக நடைபெற உள்ள 100 பால் கிரிக்கெட் தொடலில் ஆட, ஸ்மித், வார்னரின் விலை 125,000 பவுண்டுகள் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.1கோடியே 15 லட்சம் (1,14,80,576.25 Indian Rupee) என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தொடக்கத்தில் 50ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சமீப காலமாக 20 ஓவர்களைக் கொண்ட போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோல,  அண்மையில் 5 நாட்கள் விளையாடக்கூடிய டெஸ்ட் போட்டியை 4 நாட்கள் விளையாடக்கூடிய டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், டி20 போட்டியை விட குறைவான பந்துகளை கொண்ட 100 பால் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2020ம் ஆண்டில் ‘100 பால்’ கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கும் எனவும், ஓவருக்கு 6 பந்துகள் வீதம் 15 ஓவர்கள் வீசப்படும் எனவும், கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஜூலையில் முதன்முறையாக நடைபெறும் முதல் தி ஹண்ட்ரட் லீக் என்ற 100 பந்து தொடரில்   ஆட அணிகள் வீரர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளது.  பிரபல கிரிக்கெட் வீரர்களான ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு அதிகபட்ச விலை 125,000 பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மிட்செல் ஸ்டார்க், கிறிஸ் கெய்ல், இலங்கையின் பவுலர் லஷித் மலிங்கா, கேகிஸோ ரபாடா ஆகியோருக்கும் இதே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமிர், நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட், ஆகியோரின் விலை 1 லட்சம் பவுண்டு என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 570 பேர் பதிவு செய்து உள்ளனர். இவர்களில் 230 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

100பந்து ஆட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

ஒரு இன்னிங்சிற்கு 100 பந்துகள் வீசப்படும். ஒரு பவுலர் 5 அல்லது 10 பந்துகளை தொடர்ச்சியாக வீசலாம். எந்த பவுலராக இருந்தாலும் அதிகபட்சம் 20 பந்துகள்தான் வீச முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் 25 பந்துகளுக்கு மட்டும் பவர் ப்ளே இருக்கும் என்றும்,  பவர் ப்ளேயில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.