சேலம்:

தூங்கிக்கொண்டிருந்த 10வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில்  சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு நீதிமன்றம்  இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பாதகர்கள்

கடந்த 2014ம் ஆண்டு  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையம் கிராமத்தில், நள்ளிரவில் வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 5 பேர் தூக்கிச்சென்றனர்.

சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்த நிலையில், சிறுமியின் உடல் அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,  அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டது உறுதியானது.

இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட பாமக நிர்வாகி பூபதி, அவருடைய நண்பர்கள் பாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன் உள்பட 5 பேருக்கு சேலம் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.