சென்னை
டையை மீறி தாதுமணல் ஏற்றுமதி செய்வதால் தமிழக அரசுக்கு 10ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார் வைகுண்ட ராஜனின் தம்பி குமரேசன்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த வைகுண்டராஜன் தம்பி குமரேசன்  கூறியதாவது:
kamaresan
”மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் விதிக்கப்பட்ட தடையை மீறி வைகுண்டராஜன், அவரது விவி மினரல்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இதனால், தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றார்.
இந்த தாது மணல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த ஆதாரங்களை முதல்வரிடம் அளிக்க உள்ளேன். இதுவரை தடையை மீறி 50 லட்சம் டன் அளவுக்கு தாது மணலை வைகுண்டராஜன் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார். இந்த சட்ட விரோத நடவடிக்கையை அவர் ரவுடிகளின் பாதுகாப்புடன் நடத்தி வருகிறார். இப்படி முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல், 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
  இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை 50 காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், தொடர்ந்து வைகுண்டராஜனிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.  தமிழ்நாட்டை சேர்ந்த பெண் எம்.பியான  சசிகலா புஷ்பாவிற்கும் உதவி செய்து அரசுக்கு  தூண்டி விடுகிறார் வைகுண்டராஜன் என்றார்.
மேலும், அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாது மணல் கடத்தல் விவகாரத்தை, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும். மேலும் வைகுண்டராஜனின் சொத்துகளை முடக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.